பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலையீடு – கோழி முட்டையின் விலையில் மாற்றம் – அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு!

Sunday, September 6th, 2020

கோழி முட்டையின் விலையினை 2 ரூபாவால் குறைக்க தீர்மானித்தள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக கோழி முட்டையின் விலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டதால் குறித்த விடயம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதன் பிரகாரம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விடுத்த பணிப்புரைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய கோழி முட்டையொன்றை 18 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தீர்மானித்தள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: