பிரதமர் மகிந்த ராஜபக்ச விடம் குறைநிறைகளை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் – பங்காளிக் கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி எடுத்துரைப்பு!

Monday, April 12th, 2021

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க எதிரணியினர் பலவழிகளிலும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இதற்கு பங்காளிக்கட்சிகள் எவரும் எவரும் துணைபோக மாட்டார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆளும் தரப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்திருந்த ஜனாதிபதி அவர்களிடம் கலந்துரையாடியபொதே இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

அரசிலுள்ள பங்காளிக்கட்சிகள் ஒன்று கூடிப் பேசுவதில் தவறு இல்லை. ஆனால் அந்தச் சந்திப்புக்கள் எதிரணியின் சூழ்ச்சிகளுக்கு துணை போகக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் பொதுஜன பெரமுனவின் பலம்மிக்க தலைவராக பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளார் என்று இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, பங்காளிக் கட்சிகள் தமது குறைநிறைகளை அவருடன் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன் இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. எனவே இதனைக் கவிழ்ப்பதற்கு எவரும் இடமளிக்கக்கூடாது. மக்களின் ஆணையை மீறி நடப்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போவார்கள். இது கடந்த கால வரலாறு. எனவே எதிரணியின் முயற்சிகளை நாம் ஓரணியில் தோற்கடிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: