பிரதமர் – பாகிஸ்தான் கடற்படை தளபதிக்கிடையில் சந்திப்பு

இலங்கையில் விஜயத்த்தில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தா கடற்படைத் தளபதி அட்மிரல் மொஹம்மட் ஸகாவுல்லா பிரதமர் மந்திரி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு பாகிஸ்தான் வழங்கிய உதவிகள் குறித்து பிரதம மந்திரி நன்றி தெரிவித்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இரு தரப்பு சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வது பற்றி நேற்றைய பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. இந்து மா சமுத்திரத்தில் கட்டுப்பாடு இல்லாத கப்பல் போக்குவரத்திற்காக குரல் கொடுக்க இலங்கை தயாராக இருக்கிறதென இதன் போது பிரதமர் தெரிவித்தார்.
இடர் நிலைமைகளில் நெருங்கிப் பணியாற்றக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென பாகிஸ்தான் கடற்படைத் தளபதி குறிப்பிட்டார். இலங்கை பிரதமர் தமது நாட்டுக்கு விஜயம் செய்ய வேண்டுமென பாகிஸ்தானிய ஜனாதிபதியும்இ பிரதமரும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் அறிவித்தார்.
Related posts:
|
|