பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது – பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதி!

Sunday, March 27th, 2022

பிரதமர் பதவியை தான் துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் -. தாம் விரைவில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் பிரமதர் பதவியை துறக்கவோ அல்லது வேறும் ஒருவரிடம் ஒப்படைக்கவோ எவ்வித திட்டங்களும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

தம்மை பற்றியும் அமைச்சர்கள் பற்றியும் பல்வேறு தகவல்கள் வெளியிடப்படக்கூடும் எனவும் இவை அனைத்தும் பொய்யானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி மாநாட்டில் முன்னாள் பிரதமர் ரணில் பங்கேற்றமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் அரசியலில் பழுத்த அனுபவம் உடையவர் எனவும் பிரதமர் மஹிந்த ஞாயிறு இதழ் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts: