பிரதமர் பங்குபற்றலுடன் 31 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஆரம்பம்!

Friday, February 28th, 2020

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடாத்தி வருகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா நேற்று (27-02) வடமத்திய மாகாண விளையாட்டு கட்டடத் தொகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்குபற்றலுடன் ஆரம்பமாகியுள்ளது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த விளையாட்டு விழா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகமும் ஆகிய சட்டத்தரணி தெஷார ஜயசிங்ஹவின் தலைமையில் நேற்று மாலை 3 மணியளவில் ஆரம்பமாகியது.

விளையாட்டு விழாவின் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக் க்ஷ அவர்கள் கலந்துகொண்டு ஆசி கூறி விளையாட்டு விழாவை ஆரம்பித்து வைத்திருக்கிறார்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகள் இந்த விளையாட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

குறித்த விளையாட்டு விழாவானது எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: