பிரதமர் நாளை நியூசிலாந்திற்கு பயணம்!

Wednesday, September 28th, 2016

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நியூசிலாந்திற்கு விஜயம் செய்ய உள்ளார். என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ நியூசிலாந்து விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு, பொருளாதாரம், பிராந்திய பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தொடர்பில் அந்நாட்டு பிரதமர் ஜோன் கீயுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நியூசிலாந்து பிரதமரின் உத்தியோகபூர்வ அழைப்பிற்கு அமைய பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.

பால் மா உற்பத்தி தொடர்பிலும் ஏனைய சில விடயங்கள் தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன.

article-doc-1f4rl-6XOIIzE1PHSK2-686_634x421-1-450x246

Related posts: