பிரதமர் தினேஷ் குணவர்தன – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையே விசேட சந்திப்பு – எந்த வழிகளில் ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்து ஆராய்வு!

Friday, July 29th, 2022

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது நாட்டின் பொருளாதார சவால்களை சமாளிக்க அமெரிக்கா எந்த வழிகளில் ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான உரிய நடைமுறைகள் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிக்கான அணுகல் மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:


சாவகச்சேரி எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வடிகாலமைப்புக்கள் சீரின்மையால் தொற்று நோய்கள் ஏற்படும் அச்சம...
வறட்சியால் வெங்காய பயிர்ச் செய்கை முற்றாக பாதிப்பு - வங்கிக்கடன் செலுத்தமுடியாது விவசாயிகள் திண்டாட்...
இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தியது...