பிரதமர் தலைமையில் யாழ். மாவட்ட அபிவிருத்தி குறித்து விசேட கூட்டம்!

Ranil-Wickremesinghe Friday, May 19th, 2017

யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடும் வகையிலான விசேட சந்திப்பொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது

பிரதமரினால் அறிமுகம் செய்யப்பட்ட பலம் மிக்கதோர் இலங்கை, திட்டமிட்டதோர் பயணம் எனும் தொனிப்பொருளிலான பொருளாதார திட்டத்தின் கீழ் மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த அபிவிருத்தி கூட்டத்தில் வடக்கு முதல்வர் மாநகர சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள் என பலரும் கலந்துக் கொண்டனர். எதிர்வரும் பத்து வருடங்களுக்குள் அனைவரும் பயன்பெறும் வகையிலான புதிய பொருளாதாரத் திட்டம் ஊடாக நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியாக பிரதமரின் இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மாணவிகள் துஷ்பிரயோகம்: பெரியபுலவு மகா வித்தியாலய பாடசாலை சூழலில் பதற்றம்!
போலி கடவுச்சீட்டு தயாரிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது!
வடமாகாண சபையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியான நெல்சிப் ஊழல் அறிக்கை எதிர்வரும்-24 ஆம் திகதி வெளியாகி...
மீண்டும் டெங்கு வேகமாகப் பரவும் அபாயம்!
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அலுவலகம் தொடர்பில் விசேட அறிக்கை!