பிரதமர் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ குழு இரத்து!

Thursday, March 29th, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்ட பொருளாதார முகாமைத்துவ குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச்செய்துள்ளார்.

குறித்த தீர்மானம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இந்தக் குழுவால் நாட்டிற்கு பயனுள்ள எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என தெரிவித்து ஜனாதிபதியால் அந்தக் குழுவை இரத்துச் செய்ய இரண்டு அமைச்சரவைபத்திரங்கள் இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த குழுவை தொடர்ந்து பராமரித்துச் செல்ல வேண்டும் என அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்த போதும் ஜனாதிபதிஅதனை இரத்துச் செய்வதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts: