பிரதமர் சுவிற்சர்லாந்து பயணம்!

Monday, January 16th, 2017

சுவிற்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை சுவிற்சர்லாந்துக்கு பயணமானார்.

உலக பொருளாதார மாநாடு எதிர்வரும் 17ம் திகதி முதல் 21ம் திகதி வரை சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும். 40ற்கும் மேற்பட்ட நாடுகளின் அரச தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.  சுவிற்சர்லாந்தில் அரச தலைவர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரைச் சந்தித்து பேசுவதற்கும் பிரதமர் எதிர்பார்த்துள்ளார்.

f3a215c5b6ca50c7162e1147325eaa8e_XL

Related posts: