பிரதமர் அவுஸ்ரேலியா பயணம்!

Monday, February 13th, 2017

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அவுஸ்ரேலியாவுக்கு செல்லவுள்ளார்.அவுஸ்ரேலிய பிரதமரின் அழைப்பின் பேரில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அமைச்சர்களான விஜித் விஜயமுனி சொய்சா, அர்ஜூன ரணதுங்க பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் பிரதமருடன் அவுஸ்ரேலியா செல்லவுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது அவுஸ்ரேலியப் பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதன்போது இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

ranil-0-0

Related posts: