பிரதமர் – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

Friday, September 1st, 2017

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்துப்பெச்சுக்களை நடத்தியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று ஆரம்பமான இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கொழும்பு வந்துள்ளார்.இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அவர் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பில் இந்திய வெளியுறவு செயலாளர் ரவிசங்கர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்..

Related posts: