பிரதமருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, January 27th, 2022

பிரதமருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்ததாக வெளியான செய்திகளை அமைச்சர் நாமல் ராஜபக்ச முற்றாக மறுத்துள்ளார்.

எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அது உண்மைக்குப் புறம்பானது.

நானும் என் தந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நோயாளியை மட்டுமே சந்தித்தோம். அறிக்கையின்படி எனது தந்தை எந்த அறுவை சிகிச்சையும் செய்யவில்லை, ”என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பிரதமரின் செயலாளராக கடமையாற்றிய அதிகாரியினால் தனது தந்தையின் தனிப்பட்ட கணக்கிலிருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தனக்கு தெரியாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்திகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜபக்ச, உள்ளூர் செய்தித்தாள்களில் வெளியான செய்திகளைப் பார்த்த பிறகே இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரியவந்ததாக தெரிவித்துள்ளார்.

“இது போன்ற ஒரு சம்பவம் பற்றிய செய்திகளை நான் செய்தித்தாளில் பார்த்தேன். இதுபோன்ற சம்பவம் குறித்து நாங்கள் கலந்துரையாடவில்லை. எனக்குத் தெரிந்தவரை அப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: