பிரதமருக்கு அதிகாரம் வழங்கும் யாப்புத்திருத்தத்தை ஏற்க முடியாது – வாசுதேவநாணயக்கார!

Tuesday, February 21st, 2017

கொள்கை ரீதியில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு வழங்கினாலும் பிரதமரின் அதிகாரங்களை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணி செயலாளர் வாசுதேவநாணயக்கார எம். பி தெரிவித்துள்ளார்.

பொரளை என். எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று(20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-

ஜனாதிபதி, பிரதமர் ஆகிய பதவிகளிடையே அதிகாரத்தை பகிர்வது உகந்ததல்ல. தற்போதைய நிலையில் இதே போன்று நீடிப்பதே உகந்தது.

நாட்டு வளங்களை விற்பதற்கு எதிராகவே நாம் நீதிமன்றம் சென்றாலும் 10 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்குதற்கு எதிராக நீதிமன்றம் சென்றதாகப் பிரதமர் தெரிவிக்கும் குற்றச்சாட்டு தவறானது.

10 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்காக மேலும் 10 ஆயிரம் பேரின் காணிகளை பறிப்பதை அனுமதிக்க முடியாது. எதிர்ப்பு போராட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட பிரதமர் தயாராகிறார். ஹம்பாந்தோட்டையில் இந்த நிலைமையைக் கண்டோம் என்றார்.

vasu_20022017_MPP_CMY

Related posts: