பிரதமரின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்தது யார் – நாட்டு மக்களுக்கு ஆதாரங்களுடன் வழங்கப்படவுள்ளது தகவல்!

Monday, July 11th, 2022

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்தது யார் என்பதற்கான ஆதாரங்களை நாட்டுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இல்லத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார, இந்த சம்பவம் அடையாளம் தெரியாத சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட தீ வைப்பு தாக்குதல் என தெரிவித்துள்’ளார்..

இதேநேரம் பிரதமர் விக்ரமசிங்க பதவி விலகுவாரா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர், குறித்த கேள்வியை பிரதமரிடமே கேட்க வேண்டும்என கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகுவராயின், அது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: