பிரதமரின் பாரியாரின் முயற்சியால் உலகை காணும் வரம் பெற்ற சிறுவன்!

Thursday, July 29th, 2021

பிறப்பிலேயே இரண்டு கண்களிலும் பார்வைகளை இழந்த 13 வயது சிறுவனுக்கு, பார்வையை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் உதவிகளை வழங்கியுள்ளனர்.

கலேபிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 13 வயதான ஜீவந்த ரத்நாயக்க என்ற சிறுவனுக்கே, பார்வை வர பிரதமர் குடும்பத்தினர் உதவி வழங்கியுள்ளனர்.

தனக்கு பார்வையை பெற்றுக்கொடுக்க உதவிகளை வழங்குமாறு, குறித்த சிறுவன் சமூக வலைத்தளங்களில் கோரியிருந்தார்.

இந்த சமூக வலைத்தள பதிவை பார்வையிட்ட ரோஹித்த ராஜபக்ஸ, இந்த விடயத்தை தனது தாய் ஷிரந்தி ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அதற்கமைய பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச அச்சிறுவனின் ஏக்கத்தை தீர்க்க முன்வந்தார்.

முதலில் சிறுவனை கொழும்பிற்கு அழைத்து நாட்டின் சிறந்த மற்றும் புகழ்பெற்ற கண் மருத்துவரிடம் அவரை சிகிச்சைக்காக அனுமதித்து, அச்சிறுவனுக்கு பல பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அப்பரிசோதனைகளுக்கமைய கண் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாது அச்சிறுவனின் ஒரு கண்ணில் பார்வை பெற முடியும் என்ற விசேட வைத்திய நிபுணரின் பரிந்துரைக்கமைய சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய ஷிரந்தி ராஜபக்ச அனைத்து சுமைகளையும் பொறுப்பேற்று, பல சந்தர்ப்பங்களில் அச்சிறுவனை கொழும்பிற்கு அழைத்து தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவ்வாறே ஜீவந்த ரத்நாயக்க சிறுவனுக்கு உலகை காணும் வரம் கிடைத்தது.   

Related posts: