பிரதமரின் இல்லத்துக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூவர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு நேற்று தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் மூவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ, காலி மற்றும் ஜா-எல பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
இதேவேளை அலரிமாளிகையில் இருந்த தீயணைப்பு கருவியை திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பரந்தன் விபத்தில் ஆறு பேர் காயம்!
பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம் - ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!
பொலிஸ் காணி அதிகாரம் என பிழையான மனோரீதியான பிரச்சினைகளை மக்களுக்கு தமிழ் அரசியல்வாதிகள் உருவாக்கிவரு...
|
|