பிரதமராகும் அவசியம் எனக்கில்லை: சபாநாயகர்

நாட்டில் பிரதமர் ஒருவர் இருப்பதால், தனக்கு பிரதமராகும் அவசியம் இல்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமராகும் தேவை எனக்கில்லை. நாட்டில் பிரதமர் ஒருவர் இருக்கின்றார். பிரதமராக வேண்டும் என்று நான் கோரவும் இல்லை எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்றம் சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெள்ளி, ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புக்களுக்கு தடை!
தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி - அமைச்சர் அகிலவிராஜ்!
இலங்கையில் வேகமாக பரவும் மலேரியா!
|
|