பிரச்சினை மக்களுக்கு இல்லை; அரசியல்வாதிகளுக்கே உள்ளது – வடமாகாண ஆளுநர் ரெயினோல்ட் குரே!

Saturday, December 10th, 2016

கொழும்பில் கோவில் கட்ட முடியும் என்றால், முல்லைத்தீவு கொக்குளாயில் விகாரை அமைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என வடமாகாண ஆளுநர் ரெயினோல்ட் குரே கேள்வி எழுப்பியுள்ளார்.

முல்லைத்தீவில் நேற்றையதினம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வேறு ஒருவரின் காணியில் மக்கள் இல்லாத இடத்தில் அவ்வாறு நிர்மாணிக்கப்பட்டால் அது குற்றம் என தெரிவித்த அவர், வேறு ஒருவருடைய காணியில் அனுமதியின்றி விகாரை அமைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

எனினும் கரைதுரைப்பற்று முன்னாள் பிரதேச செயலாளரால் குறித்த விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் யாருக்கும் கோவில் கட்டமுடியும் பள்ளி கட்ட முடியும் அது அவர்களின் விருப்பம், ஆனால் விகாரை தொடர்பான பிரச்சினை மக்களுக்கு இல்லை எனவும் அரசியல்வாதிகளுக்கே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை 2009 ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கொக்குளாய் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் 2010 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது விகாரை அமைப்பதற்கான காணி என தெரிவித்து குறித்த பிக்கு குறித்த காணியில் மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் இதனைத்தொடர்ந்து குறித்த காணியின் உரியைமாளரான மூத்த புதல்வரான 52 வயதுடைய திருஞானசம்பந்தர் மணிவண்னதாஸால் நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யப்பட்டபோதும், குறித்த காணி உரிமையாளரின் காணிப்பத்திரம் பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் என தெரிவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எனினும் அண்மைக்காலமாக முல்லைத்தீவு கொக்குளாயில் விகாரை அமைக்கும் பணிகள் இரவு பகலாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

reginol-coorey

Related posts: