பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பாராட்டு!

Friday, April 22nd, 2022

பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவை பாராட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முற்போக்கு தொழிற்சங்கங்களுக்கான தேசிய நிலையத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் எடுத்த தீர்மானங்களாலேயே தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே தற்போது அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

நெருக்கடியை உருவாக்குவதற்கு பங்களித்தவர்கள் நிரபராதிகளாகி தற்போதைய அரசாங்கத்தின் மீது சகல பழிகளையும் சுமத்துவதாக அவர்கள் இதன்போது பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: