பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் சிறந்த தலைமைத்துவம் கொண்டவர் டக்ளஸ் தேவானந்தா ஆவர்களே – ஈ.பி.டி.பியின் வவுனியா நிர்வாக செயலாளர் திலீபன்!
Monday, October 23rd, 2017எமது மாவட்ட மக்களில் பலர் இன்றும் அடிப்படைத் தேவைகள் தீர்க்கப்படாத நிலையில் அவர்களது தேவைகளுக்கு சரியான முறையில் தீர்வு காண்பதற்கு டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையை எமது மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அம் மாவட்ட மக்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
இம் மாவட்டத்தில் வாழும் மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் நாளாந்தப் பிரச்சினைகள் மட்டுமன்றி பல்வேறு அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி செய்யப்படாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக காணி உரிமங்கள் இன்மை, குடிநீர்ப் பிரச்சினை, வீடமைப்பு வசதியின்மை, வீதிகள் செப்பனிடப்படாமை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளுடன் எமது மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தேர்தல் காலங்களில் மட்டும் எமது மக்களிடம் வரும் தமிழ் அரசியல் தலைமைகள் வாக்குகளை அபகரித்துக் கொண்டதன் பின்னர் அவர்களைக் காண முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு எமது மக்கள் தள்ளப்படுகின்றனர்.
ஆனால் எமது மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இக் கிராமங்களுக்கு வருகை தந்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிந்து கொண்டார்.
அதன் பிரகாரம் அம் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தியிருந்த டக்ளஸ் தேவானந்தா மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்தித்து கலந்துரையாடி இருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அந்த வகையில் எதிர்காலங்களில் எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சிறந்த தலைமைத்துவம் கொண்ட டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையை ஏற்றுக் கொள்வதனூடாகவே மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய காலங்களில் தீர்வுகளைக் காண முடியுமென்று தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
இதன்போது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|