பிரசார நடவடிக்கைகளின் போது விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு!

Thursday, June 11th, 2020

சுகாதார பிரிவினால் வழங்கள்பட்டுள்ள விதிமுறைகளுக்கமையவே பொதுத் தேர்தல் பிரசார கூட்டங்களை முன்னெடுக்க அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ,பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த சட்டவிதிகளை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில் பொலிஸார் அவதானமாக இருப்பதுடன், அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் தயாராக இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பில் சுகாதார பிரிவு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த விதி முறைகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கும் சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் பொலிஸார் அவதானமாக இருப்பதுடன் சுகாதார பிரிவினரின் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸார் தயாராக இருக்கின்றனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: