பிரசாரத்திற்காக பயன்படுத்தும் நிதி குறித்து கண்காணிப்பதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு அறிவிப்பு!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக அரசியல் கட்சிகள் நிதியை பயன்படுத்தும் விதம் குறித்து கண்காணிக்கப் போவதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது
வேட்பாளர்களின் எவ்வளவு பணத்தை செலவிடுகின்றனர் என்பது குறித்த விபரங்களை தற்போது சேகரித்து வருவதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
தகவல் உரிமை சட்டத்தினை பயன்படுத்தி அரசவளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்த விபரங்களை பெறப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரமான நீதியான தேர்தலை உறுதி செய்வதற்காக தனது அமைப்பு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்று கூறும் கூட்டமைப்பினர் தம்மிடம் உள்ள அதிகாரங்களைக் கொண்டு என்ன செ...
தமிழர்கள் தமது கலாசாரங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்: வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு!
தென்னை முறிந்து வீழ்ந்ததால் மாணவன் காயம் - மீசாலையில் சம்பவம்!
|
|