பிரசவத்தின் போது தாயும், பிறந்த குழந்தையும் மரணம்!

பிரசவத்திற்காக மஹியங்கணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயொருவர் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது . மஹியங்கணை – 80 ஏக்கர் பிரதேசத்தை சேர்ந்த பிரதேசவாசிகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
மஹியங்கணை சோரபொர 80 ஏக்கர் பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான தாயொருவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காக மஹியங்கைண ஆதார மருத்துவமனையில் கடந்த 26 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.முதலாவது பிரசவம் சத்திரச் சிகிச்சை மூலம் இடம்பெற்றுள்ள நிலையில், தாயின் உடல் நிலை சிறந்த நிலையில் காணப்பட்டதால் இந்த பிரசவத்தை சாதாரணமாக செய்ய மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர். எனினும் அந்த பிரசவத்தை திடீரென சத்திரச் சிகிச்சை மூலம் மேற்கொள்ள மருத்துவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் தாய் உயிரிழந்துள்ளார். பின்னர் சிகிச்சைப் பெற்று வந்த குழந்தையும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|