பிர­தேச மக்­களின் பாது­காப்பை உறு­தி­ப்ப­டுத்த நட­வ­டிக்கை  -ஜனாதிபதி தெரி­விப்பு!

Tuesday, June 7th, 2016

சாலாவ இரா­ணுவ முகாமின் ஆயுத களஞ்­சி­ய­சா­லையில் ஏற்­பட்ட தீ வி­பத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பிர­தே­சங்­களில் வசிக்­கின்ற மக்­களின் பாது­காப்பை உறு­தி­ப்ப­டுத்த நடவ­டிக்கை எடுக்­கு­மாறு அனைத்து அரச அதி­கா­ரி­க­ளுக்கும் பணிப்­புரை விடுத்­துள்ளேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். கொஸ்­கம சாலாவ பகு­தி யில் அமைந்துள்ள இரா­ணுவ முகாமில் ஏற்­பட்ட தீவி­பத்து தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் வெளி­யிட்­டுள்ள கருத்­தி­லேயே அவர் இதனை குறிப்­பிட்­டுள்ளார்

கொஸ்­கம சாலாவ பகு­தியில் அமைந்­துள்ள இரா­ணுவ முகாமில் ஏற்­பட்ட தீவி­பத்து காய­ம­டைந்து உயி­ரி­ழந்த இரா­ணுவ வீரரின் உற­வி­னர்­க­ளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன். ஆயுத களஞ்­சி­ய­சா­லையில் ஏற்­பட்ட தீ வி­பத்தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பிர­தேச மக்­களின் பாது­காப்பை உறு­தி­ப்ப­டுத்த நடவடிக்கை எடுக்கு­மாறு அனைத்து அரச அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்

Related posts: