பின்னடைவை ஏற்றுக்கொள்கின்றேன் – ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் !
Monday, February 12th, 2018நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
மக்களின் கருத்தையும் ஆணையையும் தமது கட்சி முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார். இந்த முடிவுகள் தமது கட்சிக்கு ஒரு எச்சரிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து திருத்தமான துரிதமான பயணமொன்றை தமது கட்சி முன்னெடுக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பல சேவைகள் பலருக்கு இதுவரை தென்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். இந்த சேவைகளின் நன்மைகள் விரைவில் பொதுமக்களை போய்ச் சேரும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
Related posts:
வெளியேற்றப்படும் குப்பைகள் தொடர்பில் விரைவில் சுற்றுநிருபம்!
சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகளை தரப்படுத்த சுயாதீன மீளாய்வுக் குழு!
அரச நிறுவனங்களின் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவினங்களை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை புதிய வருட...
|
|