பின்தங்கிய பாடசாலைகளுக்கு உதவ முன்வராதவர்களே எமது மக்கள் பிரதிநிதிகள் – முத்தையன்கட்டு அ.த.க பாடசாலை அதிபர்!

மக்கள் பிரதிநிதிகள் தமக்கு பின்னால் திரியும் அதிபர்களுடைய பாடசாலைகளுக்கே உதவி செய்கின்றார்கள். மாறாக தேவையுடைய பின்தங்கிய பாடசாலைகளை இனம்கண்டு உதவுகின்றார்கள் இல்லை. இவ்வாறு பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார் முத்தையன்கட்டு அ.த.க பாடசாலை அதிபர்.
குறித்த பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வும் சாதனையாளர் மதிப்பளிப்பு நிகழ்வும் முத்தாரம் நூல்வெளியீட்டு நிகழ்வும் பாடசாலையின் பொது மண்டபத்தில் பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றன. நிகழ்வில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றும் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் வாக்குகளைக் கேட்கும் வரை மட்டுமே மக்களை நாடுகிறார்கள். பதவிக்கு வந்ததும் பொதுநலனை நோக்குகிறார்கள் இல்லை. உதாரணமாக இந்த வருடம் எமது பாடசாலைக்கு பிரதியாக்கம் செய்யும் இயந்திரம் பெற்றுத் தருமாறு கேட்டிருந்தோம்.
அதற்கமைய நிதி ஒதுக்கப்பட்டு பிரதேச செயலகம் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களிலும் என்னிடம் கையொப்பமும் பெறப்பட்டது. அது கிடைக்கும் என எதிரபார்த்திருந்த நிலையில் அந்த இயந்திரத்தினை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தனக்கு பின்னால் திரியும் அதிபரின் பாடசாலைக்கு மாற்றி வழங்கிவிட்டார். அந்தப் பாடசாலையில் ஏற்கனவே ஒரு பிரதியாக்கும் இயந்திரம் உண்டு. இவ்வாறான நிலை மாறவேண்டும் என்றார்.
Related posts:
|
|