பிணை வழங்கக் கோரி போராட்டம்  செய்வது சட்டவிரோதம் – நீதிபதி இளஞ்செழியன்!

Sunday, July 31st, 2016

நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படுகின்ற சூழ்நிலையில்போதைப் பொருள் வழக்குகளில் பிணை வழங்குவது பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின்அமைதியைக் கெடுத்து விடும் என கூறி, போதைப் பொருள் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, நீதிபதி இளஞ்செழியன் பிணை வழங்க மறுத்து வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளநிலையிலேயே பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாதுஎன்பதற்காக அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

பிணை வழங்க மறுத்தது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பின் தங்கிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள யாழ் குடாநாட்டை கல்வியில் முதல்இடத்திற்குக் கொண்டு வருவதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும்ஒன்று திரண்டு பெரும் முயற்சி எடுத்துள்ளதையடுத்து, மாணவர்கள் க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தயாராகியிருக்கின்றார்கள்.

மாணவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றும்போது, யாழ் குடாநாட்டில் அமைதியானநிலைமையை ஏற்படுத்த வேண்டியதும், குற்றங்களைக் கட்டுப்படுத்தி, மாணவர்கள்இயல்பாக பரீட்சை எழுதுவதற்குரிய கள நிலவரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதுமுக்கியமாகும்.

எதிர்காலத் தலைவிதியை நிர்ணயிக்கின்ற இந்தப் பரீட்சை களத்திற்குஅனுப்புவதற்காக, மிகக் கடுமையான உழைப்பின் மத்தியில் மாணவர்களை, ஆசிரியர்கள்தயார்ப்படுத்தியிருக்கின்றார்கள். சிப்பிகளாகச் செதுக்கி, பரீட்சைக் களத்திற்கு ஆசிரியர்கள் அனுப்பியுள்ளார்கள்.

இந்தப் பரீட்சையில் தமதுபிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன்பெற்றோர்கள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் சட்டம் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்குத் தனதுகடமையைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

மாணவர்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும்பரீட்சை எழுதுவதற்கு களம் அமைத்துக் கொடுக்க வேண்டியது நீதிபதிகளினதும்,சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பொலிசாரினதும் கடமையாகும் யாழ் குடாநாடு கல்வியில் முன்னிலை பெற வேண்டும் என அரசியல்வாதிகளும்,புத்திஜீவிகளும் குரல் கொடுத்து வருகின்ற சூழ்நிலையில், பாரதூரமான குற்றச்செயலாகிய போதைப் பொருள் குற்றங்களுக்கு நீதிமன்றங்கள் பரீட்சை காலங்களில் பிணைவிடுவது, கள நிலைமையப் பாதிக்கும் என இந்த நீதிமன்றம் கருதுகின்றது.

பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை நோக்கி போதைப் பொருள் கடத்தல்காரர்கள்மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களினால் போதை வஸ்துக்கள் மாணவர்களைநோக்கி நகர்த்தப்படக் கூடிய சந்தர்ப்பம் உண்டு. பரீட்சை நிலையங்களுக்குஅருகில் போதை வஸ்து விற்பனைகள் ஆரம்பிக்கப்படலாம். இதனால் மாணவர்களின் ஒருபகுதியினர் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தும் காணப்படுகின்றது.

போதைப் பொருள் கட்டளைச் சட்டத்தை உருவாக்கிய சட்டவாக்க சபையின் நோக்கத்தைநீதிமன்றம் புரிந்து கொண்டு, பிணை வழங்க வேண்டும். சமுதாயத்தைக்காப்பாற்றுவதற்காகவே, போதைப் பொருள் கட்டளைச் சட்டத்தில் போதைப் பொருள்சம்பந்தமான வழக்குகளில் பிணை கோரிக்கை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவேண்டும் என சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டு மாணவர்களின் எதிர்காலம், மாணவர்கள் க.பொ.த உயர்தரப்பரீட்சையில் சாதனை புரிய வேண்டும் என்ற, ஆசிரியர்களின் இலக்கு, பெற்றோரின்இலட்சியம் என்பன இந்த உயர்தரப் பரீட்சையில் அடங்கியுள்ளதால் இந்த உயர்தரப்பரீட்சைக் காலம் மட்டுமல்லாமல், ஆவணி மாதக் கடைசியில் நடைபெறவுள்ள தரம் ஐந்துபுலமைப்பரிசில் பரீட்சை காலத்திலும் போதைப் பொருள் வழக்குகளின் பிணைமனுக்களுக்கான பிணை வழங்கப்படமாட்டாது.

அதேநேரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் வழக்குடன்தொடர்புடைய கைதிகள் உண்ணாவிரதம் இருந்து நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்கமுடியாது.பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்இருக்கின்றார்கள் என்பதற்கும் சமூக விரோதக் குற்றச் செயல்கள் புரிந்ததாகக்குற்றம் சாட்டப்பட்ட போதைப் பொருள் விளக்கமறியல் கைதிகள் உண்ணாவிரதம்இருப்பதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

எனவே, போதைப் பொருள் வழக்குகளில் பிணை வழங்க வேண்டும் எனக் கோரி,நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பது சட்டத்துக்கு விரோதமான செயற்பாடாகும்என்றார் நீதிபதி இளஞ்செழியன்.அதேவேளை, பிணை வழங்க வேண்டும் எனக் கோரி, சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்தபோதைப் பொருள் கைதிகளின் மனைவிமார் சிலர், நீதிமன்றத்தில் கணவன்மாரின்வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகியபோது, போதைப் பொருள் வழக்கில்சம்பந்தப்பட்ட இரண்டு கைதிகள்; 100 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை உடைமையில்வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதைநீதிபதி இளஞ்செழியன் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பிணை மனுக்களைநிராகரிக்கின்றார்கள் என கூறியே கைதிகள் உண்ணாவிரதம் இருப்பதாகநீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்ததன் மூலம், உண்ணாவிரதம்இருந்து, பிணை வழங்குமாறு கோரி, நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதுசட்டவிரோதமாகும்.

அது விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும் என அந்தக்கைதிகளின் மனைவிமாருக்கு நீதிபதி எடுத்துரைத்தார்.இந்தப் பிணை மனு தொடர்பான கட்டளையை நீதிபதி பிறிதொரு திகதிக்குஒத்திவைத்துள்ளார்.

Related posts: