பிணைமுறி விசாரணை : குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் இல்லை!
Thursday, January 25th, 2018
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் சரியாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளும் பொறுப்பை ஜனாதிபதி என்றவகையிலும் தனிப்பட்ட முறையிலும் தான் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி நேற்று குறிப்பிட்டார்.
மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சில பக்கங்களை காணவில்லையென்று சிலர் குறிப்பிட்டபோதும் அதில் பக்கங்கள் எதுவும் குறைவடையவில்லையென்றும் சில சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வரை அந்த ஆவணங்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதனை வெளியிடுவதன் மூலம் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் நன்மை அடைவதற்கு சந்தர்ப்பம் இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|