பிணைமுறி மோசடி விசாரணை: சட்டமா அதிபர் திணைக்களத்தின் அர்ப்பணிப்புக்குப் பாராட்டு!

Monday, August 21st, 2017

சர்ச்சைக்கரிய பிணைமுறி மோசடி விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்ந்தும் காட்டிவரும் கரிசனைக்கும், அர்ப்பணிப்புக்கும் ஆணைக்குழுவின் நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

பெர்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான கசுன் பளிசேனவின் மீதான குறுக்குக் கேள்விகளைத் தொடுப்பதற்கு தனக்கு சிறு காலஅவகாசம் வழங்கவேண்டுமென மேலதிக சொலிஸிட்டர் நாயகம் தப்புல டி.லிவேரா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன்போதே ஆணைக்குழுவின் நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன இந்தப் பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் அவரது கோரிக்கையை ஏற்று அடுத்த அமர்வை எதிர்வரும் 25ஆம் திகதி ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts: