பிணைமுறி மோசடியை மறைக்க இடமளிக்கமாட்டோம் – இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன!

ஜனவரி மாதம் மத்திய வங்கி பிணைமுறி விநியோக விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் இதில் இடம்பெற்ற மோசடியை மறைப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்க மாட்டோம் எனவும் நிதி இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்
நிதியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பிணை முறி விநியோக மோசடியை மறைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்தவொரு வழியிலும் சந்தர்ப்பத்தை வழங்காது. மத்திய வங்கியின் முதன்மையான செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் அதனை நிச்சயம் வெளிக்கொணரவேண்டும். அதில் எவ்விதமான மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.
இந்நிலையில் தற்போது வரவுச்செலவுத்திட்ட விவாதம் நடைபெறுகின்றது. இதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் பிணைமுறி விடயம் தொடர்பான விவாதம் நடைபெறும். எந்தவொரு மக்கள் பிரச்சினையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் தொடர்பிலும் பொறுப்பில் உள்ளவர்கள் தொடர்பிலும் நிச்சயம் பதில் வழங்க வேண்டும் என்றார்.
Related posts:
|
|