பிணைமுறி தொடர்பான விசாரணையில் மோதல்கள்!

Sunday, May 7th, 2017

மத்தியவங்கியின் பிணைமுறிகள் தொடர்பில் ஆராயவெனநியமிக்கபபட்டுள்ள ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழுவின் முன்பாக நேற்றையதினம் சாட்சியமளித்தபோது அரசசட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புலடி லிவேராவுக்கும், ஏனைய சேவைவழங்குனர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் கடுமையானவார்த்தைப் பிரயோகங்கள்மற்றும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளதால் பெரும் தர்மசங்கடமானநிலை உருவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

ஆணைக்கழுவின் சாட்சியங்கள் மற்றும் ஏனைய விடயங்களைப் பொறுத்துதவறுகள் செய்யப்பட்டுள்ளவர்கள் எனத் தெரியவருகின்றநபர்களுக்கஎதிராகஎதிர்காலத்தில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படவுள்ளதாக இங்கு சாட்சிகளை நெறிப்படுத்துகின்ற சட்டமாஅதிபர் திணைக்களசட்டத்தரணிகள் சபைளின் தலைவர் சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புலடிலிவேரா தெரிவித்துள்ளார்.

குற்றஞ் சாட்டப்பட்டுள்ளதிறைசேரி பிணைமுறி விநியோகங்களின் போது அரசுக்குநிதிரீதியில் நட்டமேற்பட்டிருந்தால் அவை அனைத்தையும், பொறுப்புக் கூற வேண்டியவர்களிடம் இருந்துஅறவிடுவதற்குசிவில் சட்டத்தின் கீழும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

நாளை வெள்ளிக்கிழமை முன்னிரவு 8 மணிமுதல் மீண்டும் முடக்கப்படுகின்றது இலங்கை - ஜனாதிபதி செயலகம் அறிவிப...
சிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கு சட்டமூலம் – நாடாளுமன்றில் நிதி அமைச்சர் அலி சப்ரி நாளை...
இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வந்தது அவசரகால நிலை – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறையாகும் வகையில் அதி...

‘முடக்கம்’ மக்கள் வாழ்வாதாரத்திற்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் -இராணுவத் தளபதி ஜெனரல் சவேந...
ஜெனீவாவின் புதிய தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்க கோரிக்கை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவ...
நாட்டில் டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக...