பிசி படிவம் கிடைக்காதவர்கள் 021 222 5000 ஐ அழையுங்கள் – யாழ். மாவட்டச் செயலர் அறிவிப்பு!

வாக்காளர் பதிவு விண்ணப்பப் படிவங்கள் (பிசி படிவம்) வீடு வீடாக கிராம அலுவலர்களால் வழங்கப்படவில்லையாயின் உடனடியாக தமது பகுதி பிரதேச செயலகத்திற்கோ அல்லது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் 0212225000 இலக்கத்துக்கோ தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகள் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. கிராம அலுவலர்கள் ஒவ்வொரு வீடு வீடாகவும் சென்று பிசி படிவத்தை விநியோகிக்க வேண் டும். அவ்வாறு படிவத்தை வீட்டுக்கு கொண்டு வந்து வழங்காது அலுவலகத்திலிருந்தவாறு ஏனையவர்களிடம் பி.சி படிவத்தைக் கிராம அலுவலர்கள் கொடுத்து விட முடியாது. வீட்டுக்குக் கொண்டு வந்து வழங்கத் தவறும் கிராம அலுவலர்கள் தொடர்பில் பொதுமக்கள் தமது பகுதி பிரதேச செயலகத்திற்கோ மாவட்டச் செயலகத்திற்கோ முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும். முறைப்பாடுகள் தெரிவிப்பது தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. முறைப்பாடு தெரிவிப்பவர்களது விவரங்கள் இரகசியம் காக்கப்படும் – என்றார்.
Related posts:
|
|