பாவனைக்குதவாத உலர் உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை – எச்சரிக்கை விடுக்கிறது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Tuesday, June 14th, 2022

உணவுப் பொருட்களின் விலை உயர்வினால் பாவனைக்கு உதவாத உலர் உணவுப் பொருட்கள் சந்தையில் பரவலாக காணப்படுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

சில மோசடி வியாபாரிகள் பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை பொசொன் தானசாலைகளுக்கு வழங்குவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பொசொன் தானசாலைக்கான உணவுப் பொருட்களை நன்கொடையாகப் பெறுவதில் கவனம் செலுத்துமாறும் கோரியுள்ளார்.

பொதுமக்கள் பொருட்களை வாங்கி சேமிக்க ஆரம்பித்துள்ள போதும் அதனால் பயனில்லையென்றும் குறிப்பிட்டுள்ள அவர் பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் பிரச்சினை காரணமாக சந்தையில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதோடு பல பொருட்களுக்கு தட்டுப்பாடும் காணப்படுகிறது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: