பால் மா விலையை அதிகரிக்குமாறு வேண்டுகோள்!

Thursday, May 3rd, 2018

பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதியினை வழங்குவது குறித்து இன்னும்  தீர்மானிக்கவில்லை என தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும் விலையின் அடிப்படையில் இறக்குமதியாளர்களை சிக்கலுக்கு உள்ளாகாது தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் ஒரு தொன் பால் மாவின் விலை 3 ஆயிரத்து 250 முதல் 3 ஆயிரத்து 350 அமெரிக்க டொலர்களாக உள்ளது. எதிர்காலத்தில் அதன்விலை 3 ஆயிரத்து 400 முதல் 3 ஆயிரத்து 500வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் ஒரு கிலோ பால் மா பொதியின் விலையை 75 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: