பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவிப்பு!

பால் மா இறக்குமதியாளர்களுக்கு போதுமான அளவு டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதால் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சந்தையில் பால் மாவுக்கான தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த ஒரிரு மாத காலமாக நாட்டில் நிலவும் பால்மா தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். டொலர் நெருக்கடி காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோவின் 150 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவாலும் டிசம்பர் மாத இறுதியில் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கையில் 2020ஆம் ஆண்டு புகைத்தலுக்கு முற்றாக தடை?
ஐ.நா. கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா!
மழையுடனான வானிலை தற்காலிகமாக சிறிது குறைவடையும்!
|
|