பால் மாவின் விலை உயர இடமளிக்கப்படாது – நிதி அமைச்சர்!

Friday, November 4th, 2016

வற் வரி அதிகரிப்பின் ஊடாக இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை உயர்த்த இடமளிக்கப்படாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வற் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை உயர்த்தப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள பால் மாவின் விலை வற் வரி விதிப்பின் ஊடாக உயர்த்தப்படுவதற்கு இடமளிக்கப்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Milk-Powder

Related posts: