பால் மாவின் விலைகள் உடனடியாக அதிகரிக்கப்படாது- கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு!

சமையல் எரிவாயு மற்றும் பால் மாவின் விலைகளை அதிகரிப்பது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு அதன் விநியோக நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் இதுதொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை ஆய்வுகளை நடத்துகிறது.உடனடியாக அவற்றின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாது.
இது குறித்து நிதி அமைச்சுடனும் கலந்துரையாடல் நடத்தப்பட வேணடும் என்று கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு : 600 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!
2025 க்குள் அனைவருக்கும் குடிநீரை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதி!
இரண்டாம் கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் நாளை இறுதி முடிவு!
|
|