பால் தேநீரின் விலை இன்றுமுதல் குறைகிறது!

ஒரு கோப்பை பால் தேநீரின் விலை இன்று (27) முதல் 90 ரூபாயாக குறைக்கப்படுகிறது என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், பால்மாவின் விலை குறைவடைந்துள்ளதை பயன்படுத்தி மக்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, 100 ரூபாயாக இருந்த ஒரு கோப்பை பால் தேநீரை 10 ரூபாய் குறைந்த விலையில் நாளை முதல் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் கிலோ ஒன்றுக்கு 200 ரூபாயாலும், 400 கிராம் ஒன்றின் விலை 80 ரூபாயாலும் குறைக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் அண்மையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மணலேற்றி வந்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் சூடு?- இருவர் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதி - பருத்தித...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகத்தை விரைவாக மேற்கொள்ளுமாறு துறைசார் அமைச்சு அ...
அரச துறையில் ஊழலை தடுக்க புதிய வேலைத்திட்டம் - துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத்குமார சும...
|
|