பால் சார்ந்த உற்பத்திகள் தொழில்நுட்ப பயிற்சிநெறி!

Wednesday, July 18th, 2018

பால் உற்பத்தி செய்யும் பண்ணையாளர்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பால் சார்ந்த உற்பத்திகள் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சிநெறி நாளை 19.07.2018 வியாழக்கிழமை காலை  9 மணிக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

பால் உற்பத்தி செய்யும் பண்ணையாளர்கள் அல்லது தங்கள் குடும்ப அங்கத்தவர்கள் யாராவது ஒருவர் மற்றும் இப்பயிற்சி நெறியினை பின்பற்றுவதற்கு விருப்பமுள்ள ஏனையவர்கள் அத்தினத்தில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு பருத்தித்துறை பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி அறிவித்துள்ளார்.

Related posts: