பால்மா இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Thursday, December 14th, 2017

அண்மைக் காலமாக நாட்டில் பால் உற்பத்தி வீழ்ச்சியடைந்து வருகின்ற நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கான விசேட கூட்டமொன்று கிராமிய பொருளாதார அமைச்சில் அமைச்சர் பி.ஹரிசன் தலைமையில் கடந்த வாரம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த விசேட கூட்டத்தில் அகில இலங்கை பாற் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான நாமல் கருணாரத்ன முக்கிய பால் உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் பால் விற்பனை நிலையங்களின் தலைவர்கள் உட்பட பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பாற்பண்ணை விவசாயிகள் பலரும் பங்குபற்றியிருந்தனர்.

இங்கு தலைமையுரையாற்றிய அமைச்சர் பி.ஹரிசன் பால் உற்பத்தி மற்றும் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக அமைச்சு மேற்கொள்ளவுள்ள புதிய திட்டங்கள் பற்றி தெரிவித்ததுடன் பால் சேகரிப்பு மற்றும் பால் விநியோகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை பற்றியும் விபரங்களை வழங்கினார்.

அத்துடன வெளிநாட்டு பால் மற்றும் பால்மா வகைகளின் பாவனையை மக்களிடையே கட்டுப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார அமைச்சு நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கவுள்ள அறிவுறுத்தல் நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றியும் கூறியதுடன் வெளிநாட்டுப் பால் மற்றும் பால்மா இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.

Related posts: