பால்மாவுக்கான விலையை அதிகரிக்க இதுவரை தீர்மானிக்கப்படவில்லை – விலையேற்றம் தொடர்பில் வாழ்க்கை செலவு குழு கூட்டத்தில் தீர்மானிக்க நடவடிக்கைநுகர்வோர் பாதுகாப்பு அறிவிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் பால்மா விலையினை அதிகரிப்பது தொடர்பில் நாளைமறுதினம் இடம்பெறவுள்ள வாழ்க்கை செலவு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்பதாக உலக சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணம் உயர்வு மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி என்பனவற்றை கருத்திற்கொண்டு பால்மா விலையினை அதிகரிக்குமாறு அதன் இறக்குமதியாளர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தை கோரியிருந்தனர். எனினும் அதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் தங்களுக்கு ஏற்படும் நட்டத்தை காரணமாக கொண்டு, பால்மா இறக்குமதியினை அதன் இறக்குமதியாளர்கள் இடைநிறுத்தியிருந்தனர். இதனால் சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில், பால்மா இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஒரு கிலோகிராம் பால்மா விலையினை 350 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என இறக்குமதியாளர்களால் கோரப்பட்டது. எனினும் ஒரு கிலோகிராம் பால்மா விலையினை 200 ரூபாவினால் அதிகரிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டது.
இதற்கமைய இது தொடர்பிலான இறுதி தீர்மானமானது நாளைமறுதினம் இடம்பெறவுள்ள வாழ்க்கை செலவு குழு கூட்டத்தில் எட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|