பால்மாக்களின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!

Thursday, December 29th, 2016

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பால்மாக்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பால்மாக்களின் விலைகளை அதிகரிக்குமாறு இலங்கைக்கான பாலிறக்குமதி சங்கம் மற்றும் பாலுற்பத்தியாளர் சங்கம் என்பன இணைந்து கோரிக்கைமுன்வைத்துள்ளன.

பாலிறக்குமதி தீர்வை மற்றும் அதிக செலவீனங்களை கருத்திற் கொண்டே குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் அண்மையில்தான் வரவு செலவுத்திட்டத்தினூடாக பால்மாக்களின் விலை குறைக்கப்பட்டது. ஆகவே இது தொடர்பில் உரிய தீர்மானத்தை எடுக்க முடியாது. அவ்வாறு முடிவெடுக்கும் பட்சத்தில் பாரிய விளைவுகள் ஏற்படும் என்று நுகர்வோர் சங்கம் குறித்த கோரிக்கையினை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

29610

Related posts: