பாலியல் வன்முறையை வெளிக்கொணருவதற்கு கனடா உதவி!

Thursday, January 11th, 2018

இலங்கைக்கு பாலியல் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை வெளிக்கொணரும் பணிக்காக 09 இலட்சம் டொலர்களை கடனாக வழங்க கனடாஅரசாங்கம் முன்வந்துள்ளது.

குறித்த நிதி வழங்கல் தொடர்பான உடன்படிக்கை இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மக்கினன் மற்றும் ஐ.நா சனத்தொகை நிதியத்தின்இலங்கைப் பிரதிநிதி ரிட்சு நக்கேன் ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த நிதியானது பொது நிறுவனங்களில் இடம்பெறும் பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை வெளிப்படுத்தும் செயற்பாட்டுக்காகவழங்கப்படுகிறது.

குறித்த செயற்றிட்டம் இனப்பெருக்க சுகாதாரம் உரிமைகள் தொடர்பாகவும் பால்நிலை, பாலியல் அடிப்படையிலான வன்முறையை வெளிப்படுத்தும்பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் இதற்கு இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அதனோடு தொடர்புடைய ஏனைய அமைச்சுக்களை வலுப்படுத்தும்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Related posts: