பாலாவித் தீர்த்தத்தில் முதலைகள் நடமாட்டம் : நீராட வரும் மக்கள் அச்சத்தில்!

Saturday, June 2nd, 2018

திருக்கேதீஸ்வரம் – பாலாவி தீர்த்தத்தில் முதலைகள் நடமாட்டம் காணப்படுவதால் நீராட வரும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பாலாவி தீர்த்தக்கரையில் நீராடுவது வழக்கம். தற்போது இதில் முதலைகள் காணப்படுவதன் காரணமாக அங்கு நீராடுவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.

மக்களை தெளிவூட்டுவதற்காக பாலாவி தீர்த்தத்தில் முதலைகள் காணப்படுவதாக அறிவித்தல் பதாகையொன்று நாட்டப்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான மக்கள் இங்கு வருகை தருகின்றனர். எனவே, உயிர் ஆபத்துகள் ஏற்படுவதற்கு முன்னர், பாலாவி தீர்த்தத்திலுள்ள முதலைகளை அகற்ற வேண்டும் என பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: