பாலர் பாடசாலையை புனரமைத்து தாருங்கள் – ஈ.பி.டி.பி. கட்சியிடம் அரியாலை வடமேற்கு பகுதி மக்கள் கோரிக்கை!

Sunday, December 11th, 2016

தமது பகுதியிலுள்ள பாலர் பாடசாலை மற்றும் பொது அமைப்புகள் ஆகியவற்றின் புனரமைப்புகளுக்கு நிதி உதவி பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை வடமேற்கு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றையதினம் (11) அரியாலை வடமேற்கு பகுதி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியிக் நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசனிடமே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்தபகுதி மக்கள் தமது பகுதியில் தாம் நீண்ட நாள்களாக மின்சார வசதி, நிரந்தர தொழில்வாய்ப்பு இன்மை மற்றும் வாழ்வாதார உதவிகள் கிடைக்காமை போன்ற பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக அம்பலம் இரவிந்திரதாசனிடம் தெரிவித்துள்ளனர்.

02

மக்களது பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட அம்பலம் இரவிந்திரதாசன் குறித்த பிரச்சினைகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்று தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக உறுப்பினர் திருமதி. தயாழினி மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்தகொண்டனர்.

01

Related posts: