பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதம்முதல் திறக்க நடவடிக்கை – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, September 16th, 2021

சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக பாடசாலைகளை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலாந்துரையாடலில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக நாட்டில் 200 க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் 5 ஆயிரம் பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன் குறித்த பாடசாலைகளை அடுத்தமாத ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

இதன்படி, பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை முதலில் திறக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது

இதேவேளை பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை வகுக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றப்படாத பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவோருக்கும் விரைவில் தடுப்பு ஊசி ஏற்றப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: