பாலங்கள் அமைக்க நெதர்லாந்து அரசாங்கம் நிதியுதவி!

Tuesday, November 27th, 2018

பாலங்கள் அமைக்க நெதர்லாந்து அரசாங்கம் நிதியுதவி!

நாடுமுழுவதும் 250 கிராமிய பாலங்களை அமைப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.

இதற்கென 52.1 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்க நெதர்லாந்து அரசாங்கம் இணங்கியுள்ளது.

கடன் உதவி தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் சார்பாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல கைச்சாத்திட்டுள்ளார்.

தூர பிரதேசங்களிலுள்ள கிராமியங்களுக்கும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை வழங்கும் நோக்குடன் தேசிய வீதிப் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்கிறது.

குறித்த வேலைத்திட்டம் மாகாண சபைகள், சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related posts: