பாற்பண்ணையாளர்களை வலுப்படுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவிப்பு!.

Monday, July 19th, 2021

உள்ளூர் பாலுற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவான ‘சுபீட்சமான உற்பத்திக் கிராம’ வேலைத்திட்டத்தின் கீழ் பாலுற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வெளிநாட்டுப் பால்மாவிற்காகச் செலவிடப்படும் நிதியைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

நொச்சியாகம, கட்டுபத்வெள பகுதியில் ‘சுபீட்சமான உற்பத்திக் கிராம’ வேலைத்திட்டத்தை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: