பாரிஸ் உடன்படிக்கையில் இலங்கை அடுத்தவாரம் இணையும்!

Saturday, September 17th, 2016

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ம் திகதி இணைந்துகொள்ளவுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலோன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.20 நாடுகளுடன், இலங்கையும் பாரிஸ் உடன்படிக்கையில் இணைந்து கொள்ளும் என ஐ.நா செயலாளர் நாயகத்தின் காலநிலை மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் குழுவைச் சேர்ந்த Selwin Hart குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டெம்பர் 9ம் திகதி இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இலங்கை கைசாத்திட்டது.

37920116Ravinath

Related posts: